துலாம்:
துலாராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.


















