நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோஷ;டி மோதலில் வாள்வெட்டு இலக்கான நால்வர் காயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டு கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இரு கோஷ;டிகளுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இரு கோஷ;டிகளுக்கிடையில் இருந்து வந்த தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவித்துள்ளனர்.


















