ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 800 இற்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளதோடு, ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஜலாலாபாத்துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்தில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குணார் மாகாணத்தின் நூர் கால், சாவ்கி, வாட்பூர், மனோகி மற்றும் சபா தாரா பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் நொறுங்கியதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இதில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 2, 500 – இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு இந்தியப் பிரதமர் மோடி மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

















