பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குவாட்டா என்ற இடத்தில் அரசியல் பேரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவங்களின்போது சுமார் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

















