மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாத்தியக் கலைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

















