2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண ரி – 20 போட்டியின் ‘யு’ குழுவின் கடைசிப் போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 188ஓட்டங்கள் எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தமது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.


















