இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலி – கஹதுவத்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கே காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதற்கமைய 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தின் உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசியை 1 கிலோகிராம் 273 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளது.
ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட விலை 1 கிலோகிராமிற்கு 230 ரூபா என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


















