ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் கிடந்த பைக்குள் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் இப்பலோகம மஹவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது,
இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது.
இதனை அவதானித்த அவர் அந்தப் பையை சோதனையிட்டுப் பார்த்த போது பைக்குள் குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளது.
இதனையடுத்து அவர் அந்தக் குழந்தையை நிக்கவெரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















