கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரைக் கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் ஒக்டோபர் 3 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக ராகமை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள முதியவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போயுள்ள முதியவரின் விபரங்கள் பின்வருமாறு ;
பெயர் – ரன்ஜித் பெர்ணான்டோ
வயது – 82
முகவரி – இல. 222, ராகமை
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 432570533v
அங்க அடையாளங்கள் – 5.5 அடி உயரம்
இந்த புகைப்படத்தில் உள்ள தந்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 071 853 2532 அல்லது 077 444 8418 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

















