வரலாற்றுப் பாடத்தை கட்டாய பாடமாக ஆக்குங்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வியை நவீனமாக்க வேண்டும், அபிவிருத்தியடைந்த சமூகத்தில் சிறார்கள் தலைமுறையை அதற்கேற்ப உருவாக்குவது போல, கடந்த காலத்தை மறந்து விடவும் முடியாது.
அரச காலத்தில் நமது நாட்டின் பெருமைகளை குழந்தைகள் அறிய வேண்டும். ஏகாதிபத்திய சக்திகள் இந்த நாட்டை ஆதிக்கத்துக்குட்படுத்திய போது, அந்த ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க இந்த நாட்டின் மன்னர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் வரலாற்றை அழித்து விட முடியாது.
திறமை, ஆற்றல் மற்றும் தொழில்முறை திறன் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்குவதில் நமது அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் வரலாறு கட்டாய பாடமாக அமைந்து காணப்பட வேண்டும் என்றார்.


















