இந்த ஆண்டு உலக பாரா தடகள சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3.53.7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று, ஆசிய சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் அணித் தலைவர் நுவான் இந்திக கமகே, T44 பிரிவில் நீளம் தாண்டுதலில் 6.46 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக பாரா தடகள சம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்றதுடன், இதில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 1,000 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 விளையாட்டு வீரர்கள் 9 போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.


















