-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுவலுவுடையோர் தின விழா நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அலுவலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் சு.சிவகுமார் ,கிளிநொச்சி மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஸ்ரீ. ஜெயக்கணேஸ், கிளிநொச்சி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி து.கோதை மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை இணைப்பாளர் சி.கஜமுகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















