மணிக்கு 175.89 மைல் வேகத்தில் சைக்கிளில் பயணித்து தனது முந்தைய கின்னஸ் உலக சாதனையை பிரிட்டன் வீரர் நீல் கேம்ப்பெல் முறியடித்துள்ளார்.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் விமான நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உலக சாதனையாக உள்ள 183 மைல் வேக சாதனையை முறியடிக்கவும், 200 மைல் வேகத்தை எட்டிய முதல் நபர் என்ற சாதனையைப் படைக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டார்.
ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களால் குறிப்பிட்ட அந்த வேகத்தை அவரால் எட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.


















