ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இதில் முதலில் நடந்த ரி – 20 தொடரை பங்களாதேஷ் அணி 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஒட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் சத்ரான் 95 ஓட்டங்களும் முகமது நபி 62 ஓட்டங்களும் குவித்தனர். பங்களாதேஷ் தரப்பில் சைப் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் பங்களாதேஷ் அணி 27.1 ஓவரில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக சைப் ஹசன் 43 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணியை வைட்வேர் செய்தது. மேலும் ரி – 20 தொடரை முழுமையாக கைப்பற்றிய பங்களாதேஷ் அணிக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

















