தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 ரி-20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் தொடங்கியது.
இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கெட்டையும் இழந்தது. ரிஸ்வான் 75, சல்மான் ஆஹா 93 ஓட்டங்கள் எடத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 269 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் ஜோர்ஜி 104 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
109 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2 ஆவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவரில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் முத்துசாமி 5 விக்கெட்டும் ஹர்மர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் தென் ஆபிரிக்காவுக்கு 277 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பாட்டத்தில் ரிக்கல்டன், மார்க்ரம் சொற்ற ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து வந்த டோனி டி சோர்ஸி- ரிக்கல்டனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சோர்ஸி 16, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 54 ஓட்டங்களும் ரிக்கல்டனும் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் தென் ஆபிரிக்கா அணி 60.5 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி, அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக நோமன் அலி தேர்வு செய்யப்பட்டார்.


















