கொமர்ஷல் வங்கிக்கும், Apple இலத்திரனியல் சாதனங்களின் அங்கீகரிக்கப்பட்ட மீள் விற்பனையாளரான Gnext Store இற்கும் இடையிலான புதிய பங்குடைமையின் மூலம் வாடிக்கையாளர்களின் தொழில்நுட்பக் கனவுகளை நனவாக்கும் வகையில், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Apple சாதனங்களை நியாயமான விலைகளில் கொள்வனவு செய்யும் வசதியை வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாய ரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது.
மேலும், வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்தக் கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

















