போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 இற்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் அபராதத் தொகையை GovPay செயலி ஊடாகச் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 11,715 சாரதிகள் இந்தச் செயலி மூலம் அபராதத் தொகையினை செலுத்தினர்.
வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் அதிகளவான தொகை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினால் ஈட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.















