மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் புன்னைச்சோலை பகுதியிலுள்ள ஒருவரின் சமூக வலைதளங்களில் ஊடுறுவிய நிலையில், தாம் தவறாக சித்தரித்து பகிர்வதை நிறுத்த 70 ஆயிரம் ரூபா கப்பம் வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர் கப்பம் வழங்குவதாக தெரிவித்து, குறித்த இருவரையும் வரவழைத்து அவர்களை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில், கைதானவர்களை பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
புன்னைச்சோலை பகுதியை சேர்ந்த 19 மற்றும் 24 வயதான இரண்டு இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


















