புதுக்குடியிருப்பில் உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள மூன்று அணைக்கட்டுகளின் பணிகள் நீண்டநாட்களாக முடிவுறாதையிட்டு அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வீரசிங்கம் அணைக்கட்டின் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நிலையில், சித்தாறு அணைக்கட்டின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இது போல் சிவசாமி அணைக்கட்டில் கதவு பொருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாது காணப்படுகிறது.
இந்தப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் நிறைவு செய்யப்படும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.
எனினும், கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு காரணங்களை கூறி பணிகளை இடைநிறுத்தியுள்ளனர். இதனால் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் மூன்று அணைக்கட்டுகளும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராதுள்ளது. இதையிட்டு விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

















