அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பொதுமக்கள், நலன் விரும்பிகள், போராளிக்குடும்பங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
















