திருகோணமலை – மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


















