பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதன் அர்ச்சுனா வாக்குமூலம் வழங்க, கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை சென்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை அறியமுடிந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















