-பா.பிரதீபன்-
யாழ். அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (வயது – 59) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழிலிருந்து நயினாதீவு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து, அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வியாபாரியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக, யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்தின் சாரதியை கைது செய்த ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சாரதியை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















