-ஞானத்தமிழ்-
அளவெட்டி பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் போட்டிகளை நடாத்தவுள்ளது.
இப்போட்டிகளில் 4 மற்றும் 7 வயது வரையான மாணவர்களுக்கு நிறம் தீட்டல் போட்டியும், 8 மற்றும் 9 வயது மாணவர்களுக்கு விடுகதைப் போட்டியும், 10 வயது மாணவர்களுக்கு பொது அறிவுப் போட்டியும், 11 மற்றும் 12 வயது மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியும்,13 மற்றும் 14 வயது மாணவர்களுக்கு சித்திரப் போட்டியும் 15 மற்றும் 16 வயது மாணவர்களுக்கு ஆங்கில கட்டுரைப் போட்டியும், 17 மற்றும் 18 வயது மாணவர்களுக்கு நூல் விமர்சனப் போட்டியும், 19 மற்றும் 20 வயது மாணவர்களுக்கு கவிதைப் போட்டியும், 21 மற்றும் 25 வயது உடையவர்களுக்கு சிறுகதைப் போட்டியும், 26 வயது முதல் 30 வயது உடையவர்களுக்கு கட்டுரைப் போட்டியும் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது பெயர், வயது, தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை 0770157732 என்ற தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி, முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















