வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்ஞையை மீறி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தைச் சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















