மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது.
மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் 21 – 15, 12 – 21, 15 – 7 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.
தொடர்ந்து கத்தாருக்கு எதிராக இரவு நடைபெற்ற போட்டியிலும் 21 – 18, 8 – 21, 15 – 12 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.
இலங்கை அணியில் திதுல மஹீம, குசல் துல்மின ஆகிய ஜோடியினர் இடம்பெற்றனர்.


















