-பா.பிரதீபன்-
வட மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் 01.01.2026 முதல், சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் 290 ஆசிரியர்களை தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்றம் செய்ய தீர்மானித்ததற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடாக குறித்த இடமாற்ற தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த மனு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 2 மணியளவில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனு தொடர்பான சமர்ப்பணத்தை முன்வைத்திருந்த நிலையில், அம்மனு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இதன்படி குறித்த மனு வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கான திகதியிடப்பட்டுள்ளது.


















