‘ஊவா நவோதய’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற கலை, கலாசார விழாவுடன் இணைந்ததாக ஆதிவாசிகள் அகராதி வெளியிடப்பட்டுள்ளது.
மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள தம்பான பகுதியில் ஆதிவாசிகள் தமது கலை, கலாசாரங்களைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
குறிப்பாக அவர்களது மொழி, நடை, உடை, பாவனை, கலாசாரம், மருத்துவம், உணவுமுறை போன்ற அம்சங்களை பெரிதும் மதித்துப் பாதுகாக்கின்றனர்.
இவற்றை நவீன காலத்து பிந்திய சந்ததிகளுக்கு பாதுகாத்து வைப்பதுடன் தற்காலத்தவர்கள் அதனைப் புரிந்துகொள்ளும் வகையிலும் மேற்படி அகராதி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
















