ஆறுமுகநாவலரின் 146 வது குருபூஜை தினம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் இடம்பெற்றது.
இதன்போது, அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரிலே பலியாகியவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றது.
குறித்த அஞ்சலியினைத் தொடர்ந்து, ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி தூபி மரியாதை செலுத்தப்பட்டு, அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
















