-செ.ரவிசாந்-
நுவரெலியா கெட்டபுலா நடுப்பிரிவுப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆலயத்தில் வர்ணம் பூசுவதற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வர்ணப் பூச்சுக்களும், பதுளை ஹாலிஎல ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்காக 75 ஆயிரம் ரூபா நிதியும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகக் சென்று உதவிகளைக் கையளித்தார்.


















