கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்
அராலி மத்தி வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீரபத்திரர் ஆலயத்திற்கு சென்ற வயோதிபர் ஒருவர் அங்கு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த முருகேசு கணேசலிங்கம் (வயது – 81) என்ற வயோதிபர் ஆவார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆலயத்திற்கு சென்றவர் வீடு திரும்பாமையால் தேடிச் சென்றபோது ஆலயத்தில் சடலமாகக் காணப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.


















