-சொ.வர்ணன்-
வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களால் நேற்று வியாழக்கிழமை வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலயச் சூழலில் சவுக்கு மரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளது.

ஆலயத் தலைவர் சி.த.காண்டீபன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமூக ஆர்வலர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அ.அகஸ்ரின், திருமதி சிவசக்தி சுரேஸ்குமார், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், யே. கமலதாஸ், கலையரசி பிரபாகரன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி ஆகியோர் மரங்களை நடுகை செய்தனர்.


















