-வி.சரவணன்-
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆளுநர் வேதநாயகனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு வன்னியில் காணப்படும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















