-செ.ரவிசாந்-
இணுவில் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மறைந்த அண்ணா தொழிலதிபர் பொ.நடராஜா ஞாபகார்த்தப் புதிய பேருந்து தரிப்பிட நிலையத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் வாசல், இணுவிலில் இணுவில் லயன்ஸ் கழகத் தலைவர் ம.காண்டீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.















