இந்தியாவின் FMCG நிறுவனமான CavinKare தனது பிரதான புதுமை வர்த்தக நாமமான Cavin’s Milkshake ஐ இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா, நேபாளம், மாலைதீவு, அவுஸ்திரேலியா, பூட்டான், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசி க்கும் 6 முதல் 60 வரையுள்ள நுகர்வோரால் மிகவும் விரும்பப்படும் இந்தியாவின் முதல் தர மிட்-மீல் ஸ்நாக் இப்போது இலங்கையிலும் கிடைக்கிறது.
இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கையில் அதி வேகமாக வளர்ந்து வரும் Milkshake சந்தையில் மிகப்பெரிய அளவில் பிரவேசிக்கும் முதல் பாரிய நிறுவனமாக CavinKare தனது வர்த்தக நாமத்தை உறுதிப்படுத்துகின்றது.
தூய பசும் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் Cavin’s Milkshake சர்வதேச தரநிலைகளுக்கு உறுதிப்ப டுத்தப்படுவதுடன், அடர்த்தியான, க்ரீமியான மற்றும் சுவையான பானமாக திகழ்கிறது.
இலங்கை நுகர்வோரின் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப, பெல்ஜியன் சொக்லேட், ஸ்ட்ரோபெரி, வெனிலா, கோப்பி ஷேக், ப்ரீமியம் மோல்ட் ஆகிய 5 சுவைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
CavinKare சர்வதேச வணிக பிரிவு துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் ராஜா வரதரா ஜு குறிப்பிடுகையில் ‘இந்தியாவின் முதல் தர மிட்-மீல் ஸ்நாக் வர்த்தக நாமமான
Cavin’s Milkshake ஐ இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமகிழ்சியடைகின்றோம். இது எங்கள் உணவு மற்றும் பானத் துறையில் முக்கியமான அடித்தளமாக அமைவதுடன் நாம் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் முதலீட்டு முயற்றசிகளை மேலும் பிரதிபலிக்ககின்றது என்றார்.















