இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என நான்கு பேர் வருகை தந்துள்ளனர். மன்னாரை சேர்ந்த இவர்கள் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தமிழ்நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.


















