பேரழிவைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, பெய்லி பால பாகங்கள் மற்றும் சிறப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C -17 விமானம் நேற்று மதியம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல், மீட்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு உதவ ஐந்து டிங்கி படகுகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக பாலங்களை அமைப்பதில் பயிற்சி பெற்ற 20 பொறியாளர்கள் கொண்ட குழுவும், பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு உதவ ஐந்து மருத்துவ ஊழியர்களுடன் தீவுக்கு வந்துள்ளனர்.
இதேவேளை சிலாபம் – புத்தளத்தை இணைக்கும் வீதியின் திக்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை சீரமைக்கும் பணிக்கு இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை இறக்கும் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாலம் சீரமைக்கும் பணி இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
















