இந்துக்களின் பெரும் சமர் 15 ஆவது கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது கொழும்பு இந்துக் கல்லூரி.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட இப்போட்டியில் 82 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி ஐந்து விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்து வெற்றியீட்டியது. திவாகரன் யாதவ் 120 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். வேலாந்துரை அபினேஷ் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
யாழ். இந்துக் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் சுதர்சன் சுபர்ணன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனகராஜா நித்தீஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களையும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களையும் பெற்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். இந்துக் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
யாழ். இந்துக் கல்லூரி சார்பில் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் ரவீந்திரன் ஆதித்தியன் 31, தினேஷ்ராமன் பிரேமிகன் 26, நேசரூபன் நிருஜன் 14 ஓட்டங்களை பெற்றிருந்தனர். கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் விஷ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும், ராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர். கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் சுரேஷ் சர்விஷ் 32, வேலாந்துரை அபினேஷ் 24, முத்துகுமார் அபிஷேக் 22, யாழ். இந்துக் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் சுதர்சன் சுபர்ணன் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையம் நேசரூபன் நிரூஜன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
யாழ். இந்து 2 ஆவது இனிங்ஸ் சுதர்சன் சுபர்ணன் 34, நேசரூபன் நிரூஜன் 21 ஓட்டங்கள். ராமநாதன் தேஷ்கர் 20 – 4 விக்., விஸ்வநாதன் யுவராஜ் 44 – 4 விக்.)
கொழும்பு இந்துக் கல்லூர்p வெற்றி இலக்கு 82 ஓட்டங்கள் -திவாகரன் யாதவ் 34 ஆ.இ., வேலாந்துரை அபினேஷ் 22, ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஆ.இ., சுதர்சன் சுபர்ணன் 28 – 2 விக்., கனகராஜ் நித்தீஸ் 29 – 2 விக்.)


















