மதம் என்பது அபினைப் போன்றது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறியது உண்மை என்பதனை இந்த பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற் பாடுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இவர்கள் இன, மத வாதம் அற்றவர்கள் போல காணப்பட்டாலும் உண்மையில் இன, மத, வாதத்தினை தூக்கி சுமப்பவர்களாகவே உள்ளனர் என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. எஸ். குகதாசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், மதம் என்பது அபினைப் போன்றது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறினார். இந்த பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர் சிலரின் செயற் பாடுகளில் இருந்து இது உண்மை என்பதனை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது என்று தெரிவித்தார்.
மேலும் கார்ல்ஸ் மார்க்ஸ் ஒரு மனிதனுக்கு அகச்சூழல், புறச் சூழல் என்று இரண்டு காணப்படுகின்றது எனவும் சில மனிதர்கள் புறச்சூழலால் மாறி இருப்பவர் போல தோன்றினாலும் அகச் சூழலால் மாறி இருக்க மாட்டார்கள் என்றார். அதுவும் உண்மை என எதிர்க் கட்சி உறுப்பினர் சிலரின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அதாவது இவர்கள் இன,மத வாதம் அற்றவர்கள் போல காணப்பட்டாலும் அகச் சூழலால் மாற்றப்படாதவர்கள் ஆகவும் உண்மையில் இன, மத, வாதத்தினை தூக்கி சுமப்பவர் ஆகவும் உள்ளனர்.


















