-அன்ரனி திலக்-
இயக்கச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி பயணித்த மூன்று சில்லு மோட்டார் சைக்கிளை பட்டாரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த மாற்றுத்திறனாளி மூன்று சில்லு மோட்டார் சைக்கிளிலில் இயக்கச்சி சந்திநோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் பின்னால் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதனால் மாற்றுத்திறனாளி தலையில் பலத்த காயமடைந்ததையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த மாற்றுத்திறனாளி இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த நபரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பளை போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை சம்பவ இடத்துக்கு அருகாமையிலுள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.


















