-சி.ஜெகதீஸ்வரன்-
வாயாலும், மூக்காலும் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்த்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாண்டித்தாழ்வு, காரைநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது – 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 8 மணியளவில் அவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 9மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் முற்பகல் 10 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை ஊர்காவற்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.















