இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பு ஒத்துழைப்பு குறித்து Barefoot மற்றும் POLSPOTTEN ஆகியன அறிவித்துள்ளன.
இலங்கை – ஆகஸ்ட் 2025 இலங்கையில் போற்றிக் கொண்டாடப்படுகின்ற கைத்தறி வர்த்தகநாமமான Barefoot மற்றும் நெதர்லாந்தின் ஆடம்பர உட்புற வடிவமைப்பு வர்த்தகநாமமான POLSPOTTEN ஆகிய இரண்டு வடிவமைப்பு சார்ந்த பெரு நிறுவனங்களும் 2025/2026 இல் அறிமுகமாகவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பிற்காக முதல்முறையாக கைகோர்த்துள்ளன.
இது 2025/2026 இல் ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த Barefoot × POLSPOTTEN சேகரிப்புக்கள் இரு வர்த்தகநாமங்களின் சந்திப்பு என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக மாற தலைப்பட்டுள்ளது.
கைவினைத்திறன், படைப்பாற்றல், மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றை இது காண்பிக்கவுள்ளதுடன், இலங்கை மற்றும் நெதர்லாந்தை சர்வதேச வடிவமைப்பு வரைபடத்தில் வலுவாகப் பொறிப்பதற்கான வாக்குறுதியுடன் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.


















