இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மின்சார சபையின் வடமாகாண ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தினால் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.
மின்சார சபையின் வடமாகாண உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்கவுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்களை பங்கேற்குமாறு சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார்.


















