இலங்கையின் வாகனத்துறையில் பிரவுன்ஸ் ஈவி ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது, அதன் முதல் உரிமையாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட புத்தம் புதிய பி.ஏ.டபிள்யூ மின்சார வாகனங்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளது.
2025 ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கிராண்ட்பாஸில் உள்ள பிரவுன்ஸ் EV விநியோக வளாகத்தில் நடைபெற்ற இந்த மைல்கல் நிகழ்வு, நாட்டின் மிகப்பெரிய மின்சார வாகன விநியோகத்தைக் குறிக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் பிரதம செயல்பாட்டு அதிகாரி கித்சிறி குணவர்தன, எல்.ஓ.எல். சி ஃபைனான்ஸ் பிஎல்சி இன் தலைவர் கொன்ராட் டயஸ் மற்றும் பிரவுன்ஸ் EV இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பவித்ரா ஜெயசேகர ஆகியோர் பெருமைமிக்க உரிமையாளர்களின் முதல் குழுவிற்கு சாவிகளை வழங்கினர்.
எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் பிரதம செயல்பாட்டு அதிகாரி கித்சிறி குணவர்தன, LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி இன் தலைவர் கொன்ராட் டயஸ் மற்றும் பிரவுன்ஸ் EV இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பவித்ரா ஜெயசேகர ஆகியோர் முதல் பி.ஏ.டபிள்யு ஈ-7 வாடிக்கையாளருக்கு சாவியை வழங்குகிறார்கள்.
பிரவுன்ஸ் ஈவி கிராண்ட்பாஸ் வளாகத்தில் விநியோகத்திற்கு தயாராக இருக்கும் பிரவுன்ஸ் ஈவி வாகனங்கள்.















