-அமெரிக்கா வெளியுறவுத்துறை-
ஈரான் போர் கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr சம்பவம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமானது என அமரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் மாலுமிகளை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கைக்கு அழுத்தம் தந்ததாக ஓடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமெரிக்க வெளியுறவு துறை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
குறித்த கப்பல், அதில் இருந்த பணியாளர்கள் மற்றும் கடலில் மீட்கப்பட்ட ஈரான் மாலுமிகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை அனைத்தும் இலங்கையின் உள்நாட்டு சட்டங்களும் சர்வதேச சட்டங்களும் அடிப்படையாக கொண்டு இலங்கை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும் என தெரிவித்தார்.
இலங்கைக்கு அரகில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை அமரிக்காவிக் தாக்குதலுக்குள்ளான ஈரானியப் படகிலிருந்து இலங்கை கடற்படை 32 பேரை உயிருடன் மீட்டதுடன், மேலும் 84 பேரின் உடல்களையும் மீட்டுள்ளது.
இன்னொரு ஈரான் போர்க்கப்பலான IRIS Bushehr கப்பலுக்கும் இலங்கை பாதுகாப்பான தங்குமிடம் வழங்கியது. அந்த கப்பலில் இருந்த 219 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டமைகறிப்பிடத்தக்கது.


















