-ஞா.தமிழ்ச்செல்வன்-
வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான மையம் நடாத்தும் விளையாட்டுப் பயிற்றுவித்தல் மற்றும் உடற்கல்வியியல் உயர்கல்வி கற்கை நெறிக்கு பயிலுநர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறிக்கு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகவும் விளையாட்டுத்துறை சான்றிதழ்களை உடையவர்களாகவும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடிவதுடன் இக்கற்கை நெறி 6 மாதங்களை கொண்டதாக நடைபெறவுள்ளது.
கற்கைநெறி தொடர்பான மேலதிக தகவல்களையும் விண்ணப்பப் படிவத்தையும் றறற.எயர.யஉ.டம என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடிவதுடன் 0242223910 அல்லது 076 7438318 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்பாக அல்லது அன்றைய தினம் கிடைக்கக் கூடியதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘உதவிப் பதிவாளர் ,தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான மையம் ,வவுனியா பல்கலைக்கழகம் ,பூங்கா வீதி,வவுனியா என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



















