-க.கனகராசா-
மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் அரிசிப் பைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மொத்த வியாபார நிலையத்தின் உரிமையாருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் பருத்திதுறை நீதவான் நீமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் அரிசிப் பையை மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய நெல்லியடி சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது 10 கிலோகிராம் நிறையுடைய 10 அரிசிப் பைகள் வண்டுகள் மொய்த்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரிசிப் பைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் விநியோகம் செய்தமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்தான வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.


















