-த.அம்பிகாவதி-
சர்வதேச வறுமை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு உடுப்பிட்டி சமுர்த்தி வங்கிப் பிரிவில் உள்ளடங்கும் 12 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு கரவெட்டி சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமையாளர் திருமதி. யோ.ஸ்ரீ சந்திரவதனா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நி.கிருஷ்ணாளினி கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கரவெட்டி பிரதேச செயலக தலைமை சமுர்த்தி முகாமையாளர் இ.அன்ரனி ‘பல்பரிமாண வறுமையும் கல்வியின் முக்கியத்துவமும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


















