-த.அம்பிகாவதி-
உடுவில் பிரதேச செயலராக நியமிக்கப்பட்ட திருமதி. பிறேமினி பொன்னம்பலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். அன்றைய தினம் உடுவில் பிரதேச செயலகத்திலும் தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னர் சங்கானை பிரதேச செயலராக இவர் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















