-பா.சதீஸ்-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கசிப்பு விற்பனை செய்யும் இடத்துக்குள் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் குடிப்பதற்கு இருந்தவர்கள் அங்கிருந்தோர் தப்பியோடியுள்ள சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 250 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தப்பியோடியுள்ள சந்தேக நபர்களை அடையாளம் கண்டிருக்கும் நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















